Thiruvasagam In Tamil Lyrics

Thiruvasagam in tamil lyrics
மாணிக்கவாசகர் திருவாசகம் / நூலாசிரியர் மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். விக்கிப்பீடியா
சிவபுராணம் எழுதியது யார்?
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்.
மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது *?
திருவாதவூர், இந்தியா மாணிக்கவாசகர் / பிறந்த இடம்
திருவிசைப்பா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர். திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.
சிவன் என்றால் என்ன?
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
திருச்சாழல் பாடப்பட்ட கோவில் எது?
'திருச்சாழல்' என்பது, தில்லைக் கோவிலில், மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
சிவபெருமான் தலையில் சூடிய ஆற்றின் பெயர் என்ன?
சிவபெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள். இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு.
திருச்சாழல் என்றால் என்ன?
சாழல் என்பது இரு பெண்கள் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு ஆகும். இதில் ஒரு பெண் இறைவனின் செயல்களை ஏளனப்படுத்திப் பேசுவாள். மற்றொரு பெண் இறைவனின் செயல்களை உயர்த்திப் பேசுவாள். மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகத்தில் 20 திருச்சாழல் பாட்டு இடம்பெறுகிறது.
Post a Comment for "Thiruvasagam In Tamil Lyrics"